இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் புகையிரத சேவையை நாடி வருவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் புகையிரத திணைக்களம் தற்போது இலாபம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புகையிரதக் கட்டணங்களை உயர்த்தாமல் தற்போதைய விலையிலேயே சேவையைத் தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை (Train Turns) உடனடியாக அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த புகையிரதப் பாதைகளை விரைவாகப் புனரமைத்து மீண்டும் முழுமையான சேவைக்குக் கொண்டு வருவது அவசியம் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.