இலங்கையில் காகிதப் பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக நவீன ‘ஸ்மார்ட் டிக்கெட்டிங்’ (Smart Ticketing) முறையை ஏப்ரல் மாதம் முதல் அறிமுகப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
முதற்கட்டமாக களனி பள்ளத்தாக்கு (Kelani Valley) பாதையில் நாரஹேன்பிட்டிய முதல் பாதுக்கை வரையிலான நிலையங்களில் பரீட்சார்த்தமாக ஆரம்பமாகும்.
நவீன சரிபார்ப்புக் கருவிகள் மூலம் பயணிகளின் வசதி மற்றும் சேவை வினைத்திறன் அதிகரிக்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து புகையிரத நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.