2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இன்று (21) முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படுவதோடு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது விளையாட்டு இரசிகர்கள் இந்த கிண்ணத்துக்கு அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
அதன் பின்னர், கிண்ணத்தை கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதுடன், அங்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு இரசிகர்கள் உலகக் கிண்ணத்துடன் நினைவுப் புகைப்படங்களை எடுக்கவும் அதைப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.