இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC), முன்னாள் நெதர்லாந்து பயிற்சியாளர் ரையன் வான் நீர்க் தேசிய பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ஜோர்டன் கிரெகரியை தேசிய பீல்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது.
SLC தேசிய உயர் செயல்திறன் மையத்தின் கீழ், இவர்கள் தங்களது துறைகளை அனைத்து தேசிய அணிகளிலும், குறிப்பாக ஆண்கள் அணியிலும் மேற்பார்வை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரையன் வான் நீர்க் – தேசிய பந்துவீச்சு பயிற்சியாளர்
2023 முதல் 2026 வரை நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் இடைக்கால தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய ரையன் வான் நீர்க், தற்போது இலங்கை தேசிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வேகப்பந்து வீச்சு துறையை அனைத்து தேசிய அணிகளிலும் மேற்பார்வை செய்வார். நெதர்லாந்து அணியில் இருந்த காலத்தில், ICC உலகக் கோப்பை 2023, ICC T20 உலகக் கோப்பை 2024 மற்றும் 2026 போன்ற முக்கிய சர்வதேச போட்டிகளில் அணியின் பங்கேற்புக்கு அவர் பங்களித்துள்ளார்.
அவரது இரண்டு ஆண்டுக் கால பணிக்காலம் 2026 ஏப்ரல் 15 முதல் ஆரம்பமாகிறது.
ஜோர்டன் கிரெகரி – தேசிய கலத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர்
நெதர்லாந்து கிரிக்கெட்டில் கலத்தடுப்பு ஆலோசகராக பணியாற்றிய ஜோர்டன் கிரெகரி, இலங்கை தேசிய கலத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அனைத்து தேசிய அணிகளிலும் கலத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சு துறைகளை மேற்பார்வை செய்வார். நெதர்லாந்து அணியில் இருந்த காலத்தில், ICC T20 உலகக் கோப்பை 2023 உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் பங்களித்துள்ளார்.
அவரது பணிக்காலமும் 2026 ஏப்ரல் 15 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அமுலாகும்.