டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், QR குறியீடு (QR-based) மூலமான பணப்பரிமாற்றங்களை ஊக்குவிக்க அமைச்சரவை மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
5,000 ரூபாவிற்கு உட்பட்ட அனைத்து QR குறியீடு அடிப்படையிலான பணப்பரிமாற்றங்களுக்கும், பணம் அனுப்புபவர் (Sender) அல்லது பெறுபவர் (Recipient) ஆகிய இருவரிடமிருந்தும் எவ்வித மேலதிக கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது.
2026 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ரொக்கப் பணப் பயன்பாட்டைக் குறைக்கவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட செயலிகள் ஊடாக ‘LankaQR’ வசதி இருந்தாலும், அதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது.
2025-ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, பெரும்பாலான QR பரிமாற்றங்கள் 5,000 ரூபாவிற்கும் குறைவாகவே காணப்படுவதால், இந்தக் கட்டண விலக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியினால் டிஜிட்டல்பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை முழுமையான அங்கீகாரம் வழங்கியுள்ளது.