இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் சுகாதார சேவை அடுத்த வாரத்திற்குள் முழுமையாக வீழ்ச்சியடையும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடி குறித்து ஆராயவும், அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கவும் GMOA இன்று (25) அவசர பொதுக்குழு கூட்டத்தை நடத்துகிறது.
மருத்துவர்களுக்குப் பிரத்தியேக எரிபொருள் அல்லது போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அவர்கள் கடமைக்குச் சமூகமளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பே அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போதுள்ள QR எரிபொருள் ஒதுக்கீடு மருத்துவப் பணிகளுக்குப் போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.