BREAKING NEWS

தேயிலை ஏலத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன? 10-வது ஏல விற்பனை நிலவரம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
தேயிலை ஏலத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன? 10-வது ஏல விற்பனை நிலவரம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் தேயிலை சந்தையில் பாரிய சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அண்மையில் நிறைவடைந்த 10-வது தேயிலை ஏலம் ஒட்டுமொத்தமாகச் சாதகமான போக்கைக் காட்டியுள்ளது. எனினும், ‘டிப்பி’ (Tippy) ரக தேயிலைகள் மட்டும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்த வாரம் 5.0 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏலத்திற்கு வந்தது. இதில் மேற்கு மற்றும் நுவரெலியா பிராந்திய தேயிலைகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாகச் சில உயர்தர தேயிலை ரகங்கள் ஒருu கிலோவிற்கு 50 ரூபாய் வரை விலை அதிகரிப்பைக் கண்டன.

பிராந்திய ரீதியான மாற்றங்கள்:

மேற்கு மற்றும் நுவரெலியா: தரமான தேயிலைகள் ஸ்திரமான விலையில் விற்பனையாகின.

ஊவா பிராந்தியம்: கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கிலோவிற்கு 50 ரூபாய் வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தாழ்நில தேயிலை: லீபி (Leafy) மற்றும் செமி லீபி (Semi-Leafy) ரகங்களுக்குச் சீரான கேள்வி காணப்பட்டது.

உயர்தர ‘டிப்பி’ ரக தேயிலைகளுக்கான கேள்வி இம்முறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய விலைக் கோரல்கள் இல்லாததால், பல சந்தர்ப்பங்களில் இவை விற்பனையாகாமல் தேக்கமடைந்தன. இது உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.