BREAKING NEWS

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானம் 

PR
priya priya punidha in Latest Updates
Report
பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானம் 

மாளிகாவத்தை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளரின் முறையற்ற நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, இன்று (21) காலை 8 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாளிகாவத்தை சிறுநீரக மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர், அங்குள்ள கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மற்றும் அவரது தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.