BREAKING NEWS

சுகோய்-30 விமான விபத்து: இந்திய விமானிகள் இருவர் பலி

PR
priya priya punidha in Latest Updates
Report
சுகோய்-30 விமான விபத்து: இந்திய விமானிகள் இருவர் பலி

அஸ்ஸாமில் விமானப் படை தளத்திலிருந்து நேற்று (06) மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போா் விமானம் மாயமானதாக தகவல்கள் வெளியான நிலையில், போர் விமானம் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியதில் இந்திய விமானப்படை விமானிகள் இருவர் உயிரிழந்தனர் என்று இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

அஸ்ஸாம் ஜோா்ஹாட் விமானப் படை தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக எம்கேஐ போா் விமானம் வழக்கமான பயிற்சிக்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பிழந்து மாயமானது.

கா்பி அங்லோங் மாவட்ட வான்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இரவு 7.42 மணிக்கு ஜோா்ஹாட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போா் விமானத்தைத் தேடும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட்டதாக பாதுகாப்புப் படை செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் கா்னல் மகேந்தா் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள விமானப்படை, துயரத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளது. மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.