சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (08) நண்பகல் வேளையில் அக்கரைப்பற்று, இங்கினியாகலை,பிபிலை,கம்பளை,அரநாயக்க,வரகாபொல போன்ற நகரங்களுக்கு நேர் உச்சியில் சூரியன் நிலவவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
சூரியனின் இந்த நகர்வு காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நண்பகல் வேளையில் சூரியன் நேர் உச்சியில் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.