சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (09) நண்பகல் வேளையில் கிரான்குளம்,கொப்பாவெளி,கவுடுபெலல்ல,கொக்கரெல்ல,பண்டுவஸ்னுவர,ஹல்மில்லவெவ,பிங்கிரிய,சிலாபம் போன்ற பகுதிகளுக்கு நேர் உச்சியில் சூரியன் நிலவவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியன் செங்குத்தாக உச்சியில் நிலவும் இந்தச் சந்தர்ப்பத்தில், செங்குத்தாக உள்ள பொருட்களின் நிழல்கள் மிகக் குறைவாகவே அல்லது நிழலே விழாமலோ இருக்கும். சூரியனின் இந்த இயற்கை நகர்வு வரும் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நிகழும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.