BREAKING NEWS

மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து  20 வயது   யுவதி தற்கொலை

PR
priya priya punidha in Latest Updates
Report
மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து  20 வயது   யுவதி தற்கொலை

மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து  20 வயது   யுவதி தற்கொலையையடுத்து மாவட்டத்தில் 23 நாளில் 16 தற்கொலை மக்கள் அச்சத்துடன் கவலை—

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு சடலமாக மீட்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கடந்த 23 தினங்களில் 16 தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்று ள்ளதுடன்  மாவட்டத்தில் தொடர்ச்சியான தற்கொலை இடம்பெற்று வருவதையடுத்து பொதுமக்கள் கடும் அச்சத்துடன் கவலையடைந்துள்ளனர்.

தாழங்குடா வைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுஷாலினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான நேற்று இரவு 7.15 மணியளவில் தற்கொலை செய்வதற்கு பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் குதித்துள்ளார். இந்த நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதனை கண்டதையடுத்து அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொலிசார் இணைந்து குறித்த யுவதி தோனியில் வாவியில் இருந்து கரைக்கு சடலத்தை எடுத்துவரப்பட்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

குறித்த யுவதி கடந்த வருடம் உயர்தர பரீட்சை  தோற்றியவர் எனவும் காதல் விவகாரத்தால் இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது டன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த யுவதியின் தற்கொலையையடுத்து இந்த வருடம் ஜனவரி  மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 23 ம் திகதிவரை மாவட்டத்தில் 3 இளம் யுவதிகள் 75 வயதுடைய 3 முதியோர் வரை 16 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்துடன் மாவட்டத்தில் தொடர்ச்சியான தற்கொலையை அடுத்து மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் கவலையடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது

(கனகராசா சரவணன்)