BREAKING NEWS

சஞ்சீவ் குப்தாவின் தமூர் நிலக்கரி சுரங்கத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
சஞ்சீவ் குப்தாவின் தமூர் நிலக்கரி சுரங்கத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு!

அவுஸ்திரேலியாவில் உள்ள தமூர் (Tahmoor) நிலக்கரிச் சுரங்கத்தை கலைக்க (Liquidation) நியூ சவுத் வேல்ஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி நெருக்கடி, காப்பீட்டு பிரீமியம் மற்றும் அரசாங்க ராயல்டி நிலுவைத் தொகைகளை (சுமார் 30 மில்லியன் டொலர்) செலுத்தத் தவறியதால், கடன் கொடுத்தவர்கள் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இதனால் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு தனது 15 வருட பணியில் எடுத்த “மிகவும் கடினமான முடிவு” என்று நீதிபதி ஆஷ்லே பிளாக் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சுரங்கத்தின் நிதிச் சரிவு மற்றும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த கலைப்பாளர்களுக்கு (Liquidators) நீதிமன்றம் அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்த முடிவால் தொழிலாளர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன, அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் நீதிமன்ற முடிவை ஏற்பதாக அறிவித்துள்ளது.