இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியிலிருந்து, சிவஞானம் ஸ்ரீதரனை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கியும், அதனை அவர் பின்பற்றாமையாலேயே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை தமிழசுக் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி, இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளது.
இதனையடுத்து, குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் கூட்டத்தில் கலந்துரையாடிய விடயங்களை வெளிப்படுத்தினார்.