தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் மற்றும் கட்சிகளின் வாக்குச் சதவீதம் குறித்த விரிவான கருத்துக்கணிப்பு முடிவுகளை,ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமாகிய ‘கே.கே. சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்’ நிறுவனத்தின் அங்கமான ‘பாராவீல்’ வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் நேரடியாகவும், ஒட்டுமொத்தமாக 70 இலட்சத்திற்கும் அதிகமான தரவுகளைக் கொண்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
வாக்குச் சதவீத கணிப்பு:
திமுக (DMK): 41.5%
அதிமுக (ADMK): 36.2%
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 13.6%
நாம் தமிழர் கட்சி (NTK): 7.9%
இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் தமிழக அரசியலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை போன்ற மாநகரங்களில் அக்கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாகவும், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெக பலமான இடத்தைப் பிடித்துள்ளதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.