இலங்கையின் தேயிலை உற்பத்தியை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய QR குறியீடு அடிப்படையிலான உரம் விநியோகத் திட்டம், வெறும் ஆறு மாதங்களுக்குள் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முந்தைய 2024/2025 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இப்புதிய முறையினால் உரம் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 122.3% உயர்ந்துள்ளது.
பதிவு செய்த விவசாயிகள்: 226,511 பேர்.
பயன்பெற்றோர்: 187,759 விவசாயிகளுக்கு 21,117 மெட்ரிக் டன் உரம் வழங்கப்பட்டுள்ளது.
விநியோக அதிகரிப்பு: கடந்த ஆண்டை விட உர விநியோகம் 62.2% அதிகரித்துள்ளது.
நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொள்ளாமல், விவசாயிகளின் மூன்று மாத கால தேயிலை இலை உற்பத்தித் திறனை (Leaf Yield) அடிப்படையாகக் கொண்டு உரம் ஒதுக்கப்படுகிறது.
50 கிலோ கிராம் உர மூட்டைக்கு ரூ. 4,000 மானியமும், 25 கிலோ கிராம் மூட்டைக்கு ரூ. 2,000 மானியமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
சர்வதேச நெருக்கடி சூழலைக் கருத்தில் கொண்டு, சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு ஒருமுறை விசேட கொடுப்பனவாக 50 கிலோ கிராம் மூட்டைக்கு மேலதிகமாக ரூ. 5,000 வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோவாக அதிகரிக்கவும், ஏற்றுமதி வருவாயை 2.5 பில்லியன் டொலராக உயர்த்தவும் இந்த டிஜிட்டல் முறை கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது