BREAKING NEWS

அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கு குறி: நியூயோர்க்கில் சிக்கிய ஈரானிய ஆதரவு சதிகாரர்.

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கு குறி: நியூயோர்க்கில் சிக்கிய ஈரானிய ஆதரவு சதிகாரர்.

அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய ஈரானிய ஆதரவுடன் சதித் திட்டம் தீட்டிய 47 வயதான பாகிஸ்தான் பிரஜை ஆசிப் மெர்ச்சண்ட் (Asif Merchant), நியூயோர்க் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2020-இல் கொல்லப்பட்ட ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் நிக்கி ஹேலி ஆகியோரைக் கொல்ல இவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2024 ஏப்ரலில் அமெரிக்கா வந்த இவர், வாடகைக்குக் கொலையாளிகளை அமர்த்த முயன்றபோது, மாறுவேடத்தில் இருந்த அமெரிக்க உளவுத் துறையினரிடம் சிக்கினார்.

ஈரானில் உள்ள தனது உறவினர்களின் பாதுகாப்பிற்காகவே இதற்குச் சம்மதித்ததாக மெர்ச்சண்ட் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் கொலைச் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.