தாய்வான் தலைநகரில் அமைந்துள்ள, 101 மாடி கட்டடத்தை, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறி அலெக்ஸ் ஹோன்னோல்ட் இன்று (25) புதிய சாதனை படைத்துள்ளார். 

உயரம் மற்றும் நேரம்: 

508 மீட்டர் (1,667 அடி) உயரமும் 101 மாடிகளும் கொண்ட இந்தக் கட்டடத்தை, அலெக்ஸ் வெறும் 1 மணிநேரம் 31 நிமிடங்கள் 43 வினாடிகளில் ஏறி முடித்தார்.

நேரடி ஒளிபரப்பு:

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. 

தாமதம்: 

உண்மையில் இந்தச் சாதனை நேற்று ( 24) நிகழ்த்தப்படவிருந்தது. 

ஆனால், மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக 24 மணிநேரம் தாமதிக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. 

சவால்கள்:

இந்தக் கட்டடம் ஒரு மூங்கில் மரம் போன்ற அமைப்பைக் கொண்டது. 

இதில் 64 ஆவது மாடி வரை உள்ள ‘Bamboo Boxes’ எனப்படும் பகுதி மிகவும் சவாலானது. 

அங்கு செங்குத்தான சரிவுகளில் வெறும் கைகளால் தொங்கியபடி அவர் ஏற வேண்டியிருந்தது. 

வெற்றிக் கொண்டாட்டம்:

கட்டடத்தின் உச்சியை அடைந்ததும் அவர் தனது கைகளை உயர்த்தி வெற்றியை அறிவித்தார். 

அங்கு அவரை அவரது மனைவி சானி மெக்கான்ட்லெஸ் வரவேற்றார். 

யார் இந்த அலெக்ஸ் ஹோன்னோல்ட்?

40 வயதான அலெக்ஸ் ஹோன்னோல்ட், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மலைகளில் ஏறும் முறையில் உலகப்புகழ் பெற்றவர். 

2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் யோசெமிட்டி தேசிய பூங்காவிலுள்ள 3,000 அடி உயரமான மலையை கயிறு இன்றி ஏறியவர். 

இவரது இந்தச் சாதனை ‘Free Solo’ என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு, ஒஸ்கார் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சினிமா