யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிடிவ்’ O+ குருதி வகைக்குத் தற்போது தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஓ பொசிடிவ்’ O+ குருதி வகைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, தற்போது தட்டுப்பாடு மேலும் தீவிரமாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, ‘ஓ பொசிடிவ்’O+ வகை குருதி உடையவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தந்து குருதிக் கொடையில் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
09 Oct 2025 | 1:08 PM
12 views
தீவிர குருதி தட்டுப்பாடு – யாழ். வைத்தியசாலையில்!
MI
Mithu Mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!
04 Apr 2026 · 5:12 AM