BREAKING NEWS

புஷ்பா 2 சாதனை முறியடிக்கப்பட்டது – துரந்தர் 2

PR
priya priya punidha in சினிமா
Report
புஷ்பா 2 சாதனை முறியடிக்கப்பட்டது – துரந்தர் 2

பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று (03) திரையரங்கில் வெளியாகியுள்ள படம் துரந்தர் 2. 

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். துரந்தர் 2 திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. 

அதே போல், நேற்று (18) மாலை உலகளவில் இப்படம் பிரீமியர் செய்யப்பட்டது. இதில் மட்டுமே 100 கோடி ரூபா வசூல் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், புக் மை ஷோ தளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் இப்படம் 1.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன் ஒரு மணி நேரத்தில் 1.07 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து மாபெரும் சாதனை படைத்திருந்தது புஷ்பா 2 படம். ஆனால், தற்போது அந்த சாதனையை துரந்தர் 2 முறியடித்துள்ளது.