இலங்கையின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதற்கு மாறாக,நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகாலை நேரங்களில் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மேலும், மின்னல் தாக்கங்களால் சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.