முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் வைத்து மனித எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளது.நேற்றைய தினம் (04.10.2025) மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் இதனை அவதானித்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில், இன்று (05.10.2025) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் ஆய்வுக் குழுவினர் , சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
05 Oct 2025 | 11:44 AM
11 views
தனியார் காணியில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு-விசாரனை தீவிரம்!
BI
biruntha biruntha
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!
04 Apr 2026 · 5:12 AM