BREAKING NEWS

மீட்புப் பணியில் தீவிரம்: ஓமானில் தரையிறங்கிய பிரித்தானிய விமானம்!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
மீட்புப் பணியில் தீவிரம்: ஓமானில் தரையிறங்கிய பிரித்தானிய விமானம்!

ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர்ச் சூழல் காரணமாக மத்திய கிழக்கிற்கான விமான சேவைகளை நிறுத்தியிருந்த பிரித்தானியா, தற்போது அதனை மீள ஆரம்பித்துள்ளது.

மத்திய கிழக்கிலுள்ள பிரித்தானியப் பிரஜைகளை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதே இந்த விமான சேவையின் முதன்மை நோக்கமாகும்.

இந்த மீட்பு நடவடிக்கையின் முதற்கட்டமாக, நேற்று (மார்ச் 04) ஓமானின் மஸ்கட்டில் பிரித்தானிய அரச விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல சிறப்பு விமானங்களை இயக்கி, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.