BREAKING NEWS

புளியாவத்தையில் சீற்றமடைந்த வானிலை: குடியிருப்புகள் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
புளியாவத்தையில் சீற்றமடைந்த வானிலை: குடியிருப்புகள் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து!

நுவரெலியா, புளியாவத்தை ஹென்சி தோட்டப் பகுதியில் நேற்று பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பாரிய மரமொன்று முறிந்து விழுந்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

திடீரென வீசிய கடும் காற்றினால் பாரிய மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த குடியிருப்புகள் மீது விழுந்துள்ளது. இதில் சில வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

மரம் விழும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சரிவுகளில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.