BREAKING NEWS

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று

PR
priya priya punidha in Latest Updates
Report
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (31) மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சருமான அருண்ஹேமச்சந்திர தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூட்டத்தை நெறிப்படுத்தியிருந்தார்.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப்,ரொசான் அக்மீமன மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள்,திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வீதி அபிவிருத்தி ,கிராமிய வீதிகள்,பாலங்கல் தொடர்பிலான முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கடந்த ஆண்டிற்கான முன்னேற்ற மதிப்பீட்டு மீளாய்வு நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.

குளங்கள் அபிவிருத்தி , புகையிரத சேவை விரிவாக்கம் மற்றும் கழிவு முகாமைத்துவம், வனஜீவராசிகள் ஊடாக யானை வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் மக்களுக்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அனர்த்த காலங்களின் போதான பாதிக்கப்பட்ட கரையோர மற்றும் வீதி புனரமைப்பு தொடர்பிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி ,நகர அபிவிருத்தி தொடர்பிலும் மேலும் பேசப்பட்டன.

மேலும் திருகோணமலை மாவட்ட குச்சவெளி பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பிலும் பொது போக்குவரத்து வசதிகள் விரிவாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.