BREAKING NEWS

வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம் : திருகோணமலை – மட்டக்களப்பு ரயில் சேவைகள் பாதிப்பு

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம் :  திருகோணமலை – மட்டக்களப்பு ரயில் சேவைகள் பாதிப்பு
நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்கள் மூழ்கியுள்ளதால், இன்று திட்டமிடப்பட்டிருந்த ஆறு நீண்ட தூர நகரங்களுக்கு இடையேயான மற்றும் இரவு நேர அஞ்சல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.