BREAKING NEWS

ஈரானுக்கு ட்ரம்ப் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கடும் மிரட்டல்

PR
priya priya punidha in Latest Updates
Report
ஈரானுக்கு ட்ரம்ப் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கடும் மிரட்டல்

அணு ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை எட்டுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை வலியுறுத்தியுள்ளார். 

இல்லையேல் அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

தெஹ்ரானுடனான 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏற்கனவே விலகியுள்ளது. 

இதன்போது, தனது கடைசி எச்சரிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலையும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தநிலையில், ஈரான் மீதான அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும் என ட்ரம்ப் தனது எக்ஸ் பதிவொன்றில் எச்சரித்துள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள ஈரான், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.