BREAKING NEWS

ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு: ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு: ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையிலான போர் 3 வாரங்களைக் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் திறக்காவிடில், அந்நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்.

போர் முடிவதாக ட்ரம்ப் கூறினாலும், ஜப்பானிலிருந்து 2,500 அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கு நோக்கி விரைந்துள்ளன.

அமெரிக்கத் தளங்கள் மீது ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானின் எண்ணெய் முனையங்களைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

போர்ச் செலவிற்காக 200 பில்லியன் டொலர் அவசர நிதியை ட்ரம்ப் கோரியுள்ளமைக்கு அமெரிக்கக் காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.