BREAKING NEWS

ஈரானுக்கு இறுதி வாய்ப்பு வழங்கிய ட்ரம்ப்

PR
priya priya punidha in Latest Updates
Report
ஈரானுக்கு இறுதி வாய்ப்பு வழங்கிய ட்ரம்ப்

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

“ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தால் மட்டுமே அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை அல்லது ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும், அதுவரை வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை” என்று ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும் ஈரானில் ஒரு சிறந்த மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியத் தலைமை உருவான பிறகு, அந்த நாட்டை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அயராது உழைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமையின் கீழ் ஈரான் முன் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வலிமையைப் பெறும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

“ஈரானை மீண்டும் சிறந்ததாக்குவோம்” என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார்.