BREAKING NEWS

யுத்தத்தை நிறுத்த ட்ரம்ப் – புடின் திட்டம்: உலகை உற்றுநோக்க வைத்த உரையாடல்.

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
யுத்தத்தை நிறுத்த ட்ரம்ப் – புடின் திட்டம்: உலகை உற்றுநோக்க வைத்த உரையாடல்.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசி ஊடாக மிக முக்கியமான ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். இந்த உரையாடல் “வெளிப்படையானது மற்றும் ஆக்கபூர்வமானது” என கிரெம்ளின் (Kremlin) மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் காரணமாக பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இரு தலைவர்களும் நீண்ட நேரம் ஆலோசித்துள்ளனர்.

ஈரான் மோதலுக்கு விரைவான அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வை எட்டுவதற்கான சில விசேட யோசனைகளை புதின் இதன்போது முன்வைத்துள்ளார். வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஈரானிய ஜனாதிபதியுடன் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களையும் அவர் ட்ரம்ப்பிடம் பகிர்ந்துள்ளார்.

யுக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய இணக்கப்பாடுகள் குறித்தும், உலக எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வெனிசுவேலா விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டது.

மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு வல்லரசு நாடுகளின் தலைவர்களும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.