BREAKING NEWS

த.வெ.க-வின் மகளிர் தின பரிசு: விஜய்யின் அதிரடி தேர்தல் அறிவிப்புகள்!

DH
dhusanthi dhusi in Tamilnadu
Report
த.வெ.க-வின் மகளிர் தின பரிசு: விஜய்யின் அதிரடி தேர்தல் அறிவிப்புகள்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (07.03.2026) மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க மகளிர் தின விழாவில், பெண்களுக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரது அறிவிப்புகள் அமைந்துள்ளன.

அரசு ஊழியர் அல்லாத 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய துறை உருவாக்கப்பட்டு, அது முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும்.

ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

காமராஜர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ₹15,000 கல்வி உதவித்தொகை.

ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுப் புடவை ‘அண்ணன் சீராக’ வழங்கப்படும்.

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம்.

சாதாரண உடையில் பெண்களைக் கண்காணிக்கும் ‘ராணி வேலுநாச்சியார் படை’ மற்றும் குற்றங்களை விசாரிக்க ‘அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்’.

பெண் குழந்தைகளுக்குத் தங்க மோதிரத்துடன் கூடிய வரவேற்புப் பெட்டகம் (Baby Kit).

பாடசாலை , கல்லூரிகள் மற்றும் ரேஷன் கடைகளில் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும்.