BREAKING NEWS

“என்னை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்!” – திருச்சியில் விஜய் அதிரடிப் பேச்சு.

DH
dhusanthi dhusi in Tamilnadu
Report
“என்னை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்!” – திருச்சியில் விஜய் அதிரடிப் பேச்சு.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கையோடு, தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், இரண்டு இடங்களிலும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

கரூர் துயரச் சம்பவம் மற்றும் அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ வெளியீடு சிக்கல்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய விஜய், இவை அனைத்தும் தமக்கும் மக்களுக்குமான பந்தத்தைப் பிரிக்க நடக்கும் “கூட்டுச் சூழ்ச்சி” எனத் தெரிவித்தார்.

“உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்து தான் நீதி வேண்டும்” என உருக்கமாகப் பேசிய விஜய் , இந்தத் தேர்தலில் மக்கள் சக்தி தமக்கு ஆதரவாகத் திரும்பும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தொடர்பாக நக்கீரன் கோபால் முன்வைத்த புகார்கள் மற்றும் சிபிஐ விசாரணை குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, படப்பிடிப்பு நடக்கவில்லை, ஒத்திகை மட்டுமே நடந்தது எனத் தவெக தரப்பு விளக்கமளித்துள்ளது. இருப்பினும், சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளதால் இது குறித்து விஜய் மேடையில் வெளிப்படையாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.