நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அபிவிருத்தி விசேட நிபுணர் திரு. எம். ஜி. ஹேமச்சந்திர அவர்கள் கடந்த 20ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.


இலங்கையிலுள்ள ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட விசேட நிபுணராகவும், கடன் திட்டங்களின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ள திரு. ஹேமச்சந்திர அவர்கள், அபிவிருத்தி திட்ட பகுப்பாய்வு, திட்ட வரைபு, பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமிடல் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் விசேட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் (CECB) ஆகியவற்றிலும் அவர் பணியாற்றியுள்ளார். தற்போது இலங்கை பொறியியல் நிறுவனத்தின் (IESL) உப தலைவராகவும் அவர் பதவி வகிக்கின்றார். உட்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் சிவில் பொறியியல் ஆகிய துறைகளில் இரு பட்டங்களை பெற்றுள்ள திரு. ஹேமச்சந்திர அவர்கள், தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டு இலங்கையின் நகர அபிவிருத்தித் துறைக்கு சிறப்பான சேவையை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்தியை உங்கள் ஊடகங்கள் வாயிலாக பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பினை வெகுவாகப் பாராட்டுகிறோம்.
இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஊடகப் பிரிவு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு.