உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் விடுத்த போர் நிறுத்தக் கோரிக்கையைப் புறக்கணித்து, ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் 6 பொதுமக்கள் பலியாகினர்; 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் கவனம் ஈரான்-அமெரிக்கப் போர் பக்கம் திரும்பியுள்ளதால், உக்ரைனுக்கான ஏவுகணைத் தற்காப்பு அமைப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
உலகளவில் எரிபொருள் விலை உயர்வு உக்ரைன் இராணுவத்தைப் பாதிக்கும் அதேவேளை, அது ரஷ்யாவிற்கு அதிக லாபத்தைத் தேடித்தருகிறது.
ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவத் தொழிற்சாலைகள் மீது உக்ரைனும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தூதர்கள் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முயன்ற போதிலும், ரஷ்யா அதனைத் தள்ளிப்போட்டு வருவதாகக் கருதப்படுகிறது.