BREAKING NEWS

உலகக்கிண்ணம் ( under 19) – ஐ.சி.சி தலைமை குழுவின் முக்கிய தீர்மானம்

MI
mithu mithu in விளையாட்டு
Report
உலகக்கிண்ணம் ( under 19) – ஐ.சி.சி தலைமை குழுவின் முக்கிய தீர்மானம்
19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் வடிவத்தை மாற்றாதிருக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற தலைமை நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தொடர் தொடர்ந்தும் 50 ஓவர்கள் கொண்டதாகவே இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, மகளிருக்கான கனிஷ்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நடத்துவது போன்று, இருபதுக்கு 20 வடிவில் நடத்த வேண்டும் என்று பரவலான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.