இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
அதன்படி, புலத்திசிபுர மற்றும் மஹாவலி கல்வியியற் கல்லூரிகளில் வசிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும், அதேபோல் கிழக்கு, தென்கிழக்கு, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
உணவு மற்றும் பானங்கள் சரியான நிர்வாகத்தின் கீழ் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் அநாவசியமாகக் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், தொடர்ந்துள்ள மின்சாரத் தடைகள் காரணமாக பல பகுதிகளில் தகவல் தொடர்பு சிரமங்கள் நீடிப்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
28 Nov 2025 | 6:08 PM
8 views
பல்கலை, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு உறுதி : அச்சம் வேண்டாம்
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை! – வெண்கலப் பதக்கம் வென்று பிரதீப் சோமசிறி சாதனை.
11 Apr 2026 · 6:52 AM