ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் ஈரான் மேற்கொண்டு வரும் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு இந்த அதிரடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த மோதல் சூழல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.