அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க, 45 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் நிரந்தர அமைதிக்கான புதிய திட்டங்கள் குறித்து சர்வதேச மத்தியஸ்தர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் உடனடி போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான புதிய வரைபு இரு நாடுகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா முன்வைத்த 48 மணிநேர குறுகிய கால போர் நிறுத்தத்தை ஈரான் நிராகரித்திருந்தது. தற்போதைய புதிய திட்டத்திற்கு ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வ சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது வரை அதிகாரப்பூர்வ போர் நிறுத்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.