BREAKING NEWS

உலகப் போரைத் தவிர்க்குமா இஸ்லாமாபாத் சந்திப்பு?

DH
dhusanthi dhusi in உலகம்
Report
உலகப் போரைத் தவிர்க்குமா இஸ்லாமாபாத் சந்திப்பு?

ஆறு வாரங்களாக மத்திய கிழக்கை உலுக்கி வரும் ஈரான் – அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க உயர்மட்டத் தூதுக்குழுவினர் இன்று (ஏப்ரல் 11, சனிக்கிழமை) பாகிஸ்தான் வந்தடைந்தனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் விசேட விமானம் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதை பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.கடந்த 6 வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போரினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகம் முடங்கி, எரிபொருள் விலையேற்றம் மற்றும் உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான இந்த நேரடிப் பேச்சுவார்த்தை, உலகப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும் ஒரு கடைசி வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான இந்தக் குழு, ஈரான் வெளியுறவு அமைச்சருடன் விரிவான ஆலோசனைகளை இன்று நடத்தவுள்ளது.