BREAKING NEWS

வெனிசுவேலாவைத் தொடர்ந்து கியூபா?- ட்ரம்பின் கியூபா வியூகம் அம்பலம்

PR
priya priya punidha in Latest Updates
Report
வெனிசுவேலாவைத் தொடர்ந்து கியூபா?- ட்ரம்பின் கியூபா வியூகம் அம்பலம்

வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததாலும், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க எடுக்கும் முயற்சிகளாலும் உத்வேகம் அடைந்துள்ள ட்ரம்ப், தற்போது கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கியூபாவின் கம்யூனிச ஆட்சியைச் சீர்குலைக்க, அந்த அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கும் சில அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக முயன்று வருவதாக ‘The Wall Street Journal’ செய்தி வெளியிட்டுள்ளது.