‘முருகா’ பாடல் மூலம் உலகத் தமிழர்களை கட்டிப்போட்ட ஈழத்து ராப் கலைஞர் வாகீசன் பாடியுள்ள “வீரனே வா” பாடல், வரும் ஏப்ரல் 11-ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியின் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி மூலம் தமிழகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற வாகீசன், தற்போது ‘போராட்டம்’ திரைப்படத்திற்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். IBC தமிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே வெளியான ‘வீர தமிழன்’ மற்றும் ‘முட்ட கண்ணு’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், மூன்றாவது பாடலாக ‘வீரனே வா’ வெளியாகிறது.
இந்தப் பாடலின் வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 11) மாலை 7 மணிக்கு சுவிட்சர்லாந்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
பூவன் மதீசனின் அதிரடி இசையும், வாகீசனின் தனித்துவமான குரலும் இணைந்துள்ளதால் இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.