BREAKING NEWS

வனிந்துT 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழக்கலாம்

PR
priya priya punidha in விளையாட்டு
Report
வனிந்துT 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழக்கலாம்

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவிற்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை அவர் பெரும்பாலும் இழக்க நேரிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

வனிந்து ஹசரங்கவிற்குப் பதிலாக இலங்கை அணியில் சகலதுறை வீரர் துஷான் ஹேமந்த இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி பங்கேற்ற அயர்லாந்துக்கு எதிரான முதலாவது போட்டி கடந்த 8ஆம் திகதி நடைபெற்றதுடன், அந்தப் போட்டியின் போதே வனிந்து ஹசரங்க இவ்வாறு உபாதைக்குள்ளாகியுள்ளார். 

குறித்த போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.