BREAKING NEWS

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம்

PR
priya priya punidha in Latest Updates
Report
வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம்

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் ஆராய்ச்சி வணிகமயமாக்கல் உட்பட்ட முயற்சிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளை வெறும் ஆய்வுகளாக மட்டும் வைத்திருக்காமல், அவற்றை சந்தைக்குக் கொண்டு வரும் தொழில்களாக மாற்றுவது என்பன இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.