நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் சில மரக்கறிகளின் விலைகளில் இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதன்படி, நேற்றையதினம் கோவா ஒரு கிலோகிராம் 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அத்துடன் கரட் ஒரு கிலோகிராம் நேற்று 380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை லீக்ஸ் ஒரு கிலோகிராம் நேற்றையதினம் 360 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று சற்று அதிகரித்து 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
எனினும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 340 ரூபாய்க்கும், கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 700 ரூபாய்க்கும், புரோக்கோலி ஒரு கிலோகிராம் ஆயிரத்து 300 ரூபாய்க்கும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.