தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் இதுவரை 69 படங்களில் நடித்துள்ளார். அவரின் சமீபத்திய திரைப்படமான ‘ஜனநாயகன்’ 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெட்ச் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எதிர்பாராத அளவுக்கு மாஸாக நடந்த அந்த விழா ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது.
இதனால், பொங்கல் திருநாளில் படத்தை திரையரங்குகளில் காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத காரணங்களால் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் தள்ளிப்போனது.
அதன்பிறகு, படம் விரைவில் வெளியாகும் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்க உள்ளதாக தகவல் வெளியானதால், விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ரிவைசிங் கமிட்டி குழுவில் உள்ள ஒரு உறுப்பினருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் படத்தின் ஸ்க்ரீனிங் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படம் எப்போது திரையிடப்படும், அதன் பிறகு வெளியீட்டு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.