BREAKING NEWS

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் அதிரடி பிரசாரம்.

DH
dhusanthi dhusi in Tamilnadu
Report
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் அதிரடி பிரசாரம்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தட்டாஞ்சாவடி பகுதியில் தவெக தலைவர் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியை “குழம்பிப்போன கூட்டணி” என்றும், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியை “சோர்ந்துபோன கூட்டணி” என்றும் விஜய் கடுமையாகச் சாடினார்.

தவெக எந்தக் கட்சியுடனும் ஒட்டி உறவாடவில்லை என்றும், மக்களை மட்டுமே நம்பித் தனித்துக் களத்தில் நிற்பதாகவும் தெரிவித்தார்.

தவெக ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர முழுமையாக முயற்சிப்போம் என உறுதி அளித்தார்.

“புதுச்சேரிக்கு நல்லாட்சி அமைய தவெகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள், நான் உங்களுக்குத் துணையாக இருப்பேன்” என மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.