BREAKING NEWS

தவெக வேட்பாளர் தேர்வு:போட்டியிட விரும்புவோருடன் நேருக்கு நேர் பேசும் விஜய்.

DH
dhusanthi dhusi in Tamilnadu
Report
தவெக வேட்பாளர் தேர்வு:போட்டியிட விரும்புவோருடன் நேருக்கு நேர் பேசும் விஜய்.

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கான நேர்காணல் இன்று காலை 10.30 க்கு ஆரம்பமாகி , தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

4,200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய நடிகர் விஜய் நேரடியாகக் கலந்துரையாடி வருகிறார்.

விண்ணப்பதாரர்களின் அரசியல் பின்புலம், சமூக சேவை மற்றும் கட்சியின் கொள்கைகள் குறித்த அவர்களின் புரிதல் குறித்து விஜய் முக்கியக் கேள்விகளை எழுப்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேர்காணலுக்காக மாநிலம் முழுவதிலுமிருந்து நிர்வாகிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் குவிந்துள்ளதால், பனையூர் அலுவலகப் பகுதி மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் விஜய் கடைபிடிக்கும் இந்த அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.