தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
இருப்பினும், பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனுவை எதிர்த்து பாமகவினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். சொத்துக் கணக்கு மற்றும் வருமான வரி விவகாரங்களை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதற்கான ஆதாரங்களை அரை மணி நேரத்தில் தாக்கல் செய்வதாகக் கூறிச் சென்றுள்ளனர். இதனால் பெரம்பூரில் பரபரப்பு நிலவுகிறது. அதேநேரம் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு எவ்வித தடையுமின்றி ஏற்கப்பட்டுள்ளது.