BREAKING NEWS

கொட்டாஞ்சேனை பயனியர் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு;

PR
priya priya punidha in Latest Updates
Report
கொட்டாஞ்சேனை பயனியர் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு;

கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் தொடர் மாடி குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் பயனியர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இம்முறையும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் F. M. ஷியாம் தலைமையில் அக்கழகத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தின் போது புதிய தலைவராக ரஜாப்டீன் சாருக்ஷன்
செயலாளராக கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் F. M. ஷியாம்
பொருளாளராக நடராஜா சதீஸ் ஆகியோர் கழக உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு விஷேட அழைப்பின் பெயரில் கொழும்பு பிரதேச செயலகத்தின் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் வாசகன் கணேஷ் வரனும் ,கண்ணகி கலாலயம் கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் A..K இளங்கோவும் கலந்துக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் பயனியர் விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் கலந்துக் கொண்டு தங்க பதக்கம் 2 வெள்ளி பதக்கம் 3
வெண்கல பதக்கம் 3ம் பெற்றுக்கொண்டுள்ளனர். அத்தோடு சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வுகளுக்கான நிகழ்ச்சி திட்டங்களையும் இப்பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான விளையாட்டுத் திறன்களை ஊக்குவிப்பதன் மூலம் வளமான சந்ததிகளை உருவாக்க முடியும் என்பதாக அதன் செயலாளர் எமக்கு தெரிவித்தார்.

ஆக்கம் கவிதா இளங்கோ