மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களை வாங்கிய நுகர்வோருக்கு இனிமேல் மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களை நீல நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
வழக்கமான தினசரி எரிவாயு வெளியீட்டை விட தற்போது எரிவாயு வெளியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நுகர்வோர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்குத் தேவையான வசதிகளை நாங்கள் வழங்குவோம். ஒரு லட்சம் எரிவாயு சிலிண்டர்களைப் பெற நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். 12 ஆம் திகதி முதல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும். மஞ்சள் சிலிண்டரை நீல நிற சிலிண்டருக்கு மாற்றுவது சாத்தியமா என்று எங்களிடம் கேட்கப்படுகிறது. மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களை வாங்கிய நுகர்வோருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் இனி எரிவாயுவை வழங்கவில்லை என்றால், அது குறித்து நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டி ஏற்படும்.